உள்ளூர் செய்திகள்

பாலமேட்டில் மகாலிங்க சுவாமி மற்றும் ஜீவசமாதி மடத்தில் கும்பாபிஷேக நடைபெற்றது.

மகாலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-11-14 14:04 IST   |   Update On 2022-11-14 14:04:00 IST
  • மகாலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
  • வாஸ்து சாந்தி, புண்ணியாசனம், உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது.

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டிக்கு சொந்தமான சுமார் 500 ஆண்டுகள் பழமையான மகாலிங்க சுவாமி மற்றும் ஜீவசமாதி மடத்தின் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

3 நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, புண்ணியாசனம், உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து நான்கு கால யாக பூஜையுடன் மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடாகி வானத்தில் கருடன்கள் வட்டமிட ராமேசுவரம், அழகர்கோவில் உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை கலசங்கள் மீது ஊற்றப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை பொருட்களும், அன்ன தானமும் வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தொழிலதிபர்கள் கே.ஜி.பாண்டியன், ஏ.வி.பார்த்தி பன் மற்றும் பாலமேடு கிராம அனைத்து உறவின்முறை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாட்டினை கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொரு ளாளர் ஜோதிதங்கமணி, மற்றும் கமிட்டியினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பாலமேடு போலீசார் செய்திருந்தனர்

Tags:    

Similar News