மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல்
- மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
- இந்த நிலையில் ஆவண பட்டியலில் உள்ள முதலீட்டாளர் முகவரிகள் தவறுதலாக உள்ளது தெரிய வந்துள்ளது.
மதுரை
மதுரையைச் சேர்ந்த ஆலீஸ் ஜான்சிராணி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 'ரெக்ஸ் லைப் கேர் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட், ரிலேக்கா அக்ரோ பார்ம்ஸ் எஸ்டேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மீது, டான்பிட் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றவாளிகளின் அசையும்-அசையா சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் இழப்பீட்டுத் தொகை திருப்பித் தரப்பட உள்ளன. இந்த நிலையில் ஆவண பட்டியலில் உள்ள முதலீட்டாளர் முகவரிகள் தவறுதலாக உள்ளது தெரிய வந்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், தபால் தந்தி நகர், சங்கர பாண்டியன் காலனியில் உள்ள மதுரை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும். மேற்கண்ட தகவலை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்து உள்ளனர்.