உள்ளூர் செய்திகள்

மதுரை மாநகராட்சி ஊழல் பட்டியல் விரைவில் வெளியாகும்-பா.ஜ.க. நிர்வாகி

Published On 2023-04-15 08:35 GMT   |   Update On 2023-04-15 08:35 GMT
  • மதுரை மாநகராட்சி ஊழல் பட்டியல் விரைவில் வெளியாகும் என பா.ஜ.க. நிர்வாகிகள் கூறினர்.
  • இதற்கான ஆடியோ எங்களிடம் உள்ளது.

மதுரை

மதுரை மாநகர மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் தமிழக பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா, மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா யாருடன் கூட்டணி? என்பது பற்றி உயர் மட்ட குழு கலந்து பேசி முடிவு செய்து அறிவிக்கும். எங்களை பொருத்தவரை பாரதிய ஜனதா தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கம்.

அதாவது கடந்த 2009-ம் ஆண்டு பொன். ராதா கிருஷ்ணன் தலைமையி லான கூட்டணி, தனித்துப் போட்டியிட்டு பெருவாரி யான வாக்குகளை பெற்றது. அதேபோல தேசிய ஜனநாயக கூட்டணி தனித்து போட்டியிட வேண்டும்.

இல்லையென்றால் பாரதிய ஜனதா தலைமையில் கூட்டணி அமைய வேண்டும். இது தொடர்பாக பாரதிய ஜனதா மேலிடத்துக்கு கோரிக்கை வைக்க உள்ளோம்.

மதுரை மாநகரில் பாதாள சாக்கடை இணைப்பு பணிக்கு ரூ.60 ஆயிரம் லஞ்சம் பெறப்படு கிறது. இதற்கான ஆடியோ எங்களிடம் உள்ளது. அதே போல குடிநீர் இணைப்புக்கு ரூ.50 ஆயிரம், குடிநீர் குழாய் இணைப்பை சரி செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெறப்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் நடந்துள்ள ஊழல் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம். விரைவில் இது பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாக வெளியிடப் படும்.

தமிழகத்தில் 75 ஆண்டு காலமாக ஆட்சி செய்த திராவிட கட்சிகள் போட்டி போட்டிக்கொண்டு ஊழல் செய்து தங்களை வளர்த்துக் கொண்டன.

அண்ணாமலை தி.மு.க. நிர்வாகிகளின் ஊழல் பட்டியலை வெளி யிட்டுள்ளார். அதனை திருப்புவதற்காக தேவை யற்ற விவரங்களை தி.மு.க. பெரிதுபடுத்தி வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News