உள்ளூர் செய்திகள்

மது கடத்தல் வழக்குகள்: போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 113 வாகனங்கள் ஏலம்

Published On 2023-05-29 08:36 GMT   |   Update On 2023-05-29 08:36 GMT
  • போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 113 வாகனங்கள் ஏலம் விடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
  • பொது ஏலம் வருகிற 3-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதான வளாகத்தில் நடைபெற உள்ளது.

மதுரை

மதுரை மாவட்டத்தில் மது கடத்தலில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் போலீஸ் காவலில் வைக்கப்படுகிறது. இந்த வாகனங்கள் அவ்வப்போது ஏலம் விடப்படுவது வழக்கம். போலீசாரால் கைப்பற்றப் பட்ட வாகனங்களுக்கான பொது ஏலம் வருகிற 3-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதான வளாகத்தில் நடைபெற உள்ளது.

பொது ஏலத்தில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலத்தில் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 113 வாகனங்களை 31 மற்றும் 1-ந்தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இருசக்கர வாகனத்திற்கு முன்பதிவாக ரூ.5ஆயிரமும், நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.10ஆயிரமும் செலுத்த வேண்டும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் அந்த வாகனத்தின் ஏலத்தொகை யை அன்றைய தினமே கட்டி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம்.

வாகனத்தை ஏலம் எடுத்து முழுப்பணம் கட்டி வாகனத்தை எடுக்காத வர்களின் முன்பணம் திருப்பி தரப்பட மாட்டாது. அந்த பணம் அரசு கணக்கில் செலுத்தப்படும். ஏலத்தில் எடுக்கப் படும் வாகனத்திற்கு அரசால் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரி தனியாக வசூலிக்கப்படும்.

இந்த தகவல் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News