மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
- மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு குவிந்தது.
- மாநில அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் மாவட்ட அளவில் நடந்தது. இதில் மதுரையை சேர்ந்த பல்வேறு கல்லூரி அணிகள் பங்கேற்றன. கால்பந்து, கிரிக்கெட் போட்டிகளில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
அதன்படி இந்த கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பாலமுருகன், யுகேஷ், அபிஷேக், அப்துல் ரகுமான் ஆகிய 4 பேர் கால்பந்து போட்டியிலும், கோபி, பிரவீன், சந்தோஷ், விஜயபிரபாகரன் ஆகியோர் கிரிக்கெட் போட்டியிலும், மதுரை மாவட்ட அணிகளில் கலந்து கொண்டு பதக்கங்களும், சான்றிதழ்களும் பெற்றனர். இவர்கள் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
தேர்வாண மாணவர்க ளை கல்லூரி தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன்,உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, பொருளாளர் ஆழ்வார்சாமி, கல்லூரி முதல்வர் ராமசுப்பையா, சுயநிதி இயக்குநர் பிரபு, உடற்கல்வி இயக்குநர் ராகவன், உதவி இயக்குநர் கோவிந்தம்மாள் ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.