உள்ளூர் செய்திகள்

காமராஜர் பிறந்த நாள் போட்டிகள்

Published On 2022-07-13 09:35 GMT   |   Update On 2022-07-13 09:35 GMT
  • ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் போட்டிகள் நடந்தன.
  • காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மதுரை

மதுரை நாடார் உறவின்முறைக்குப் பாத்தியமான ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்த நாள் விழா போட்டிகளின் தொடக்க விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்புரையாற்றினார். பெருந்தலைவர் காமராஜர் திருவுடப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளித்தலைவர் மற்றும் செயலாளர் தர்மராஜ் தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார்.

பள்ளித் துணைத்தலைவர் பாஸ்கரன் பள்ளி பள்ளி துணைச்செயலாளர் செந்தில்குமார், பள்ளி விடுதிக்குழுச் செயலாளர் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியர்-விழா அமைப்பாளர் முத்துசெல்வம் காமராஜ பிறந்த நாள் விழா போட்டிகள் குறித்து அறிமுகவுரையாற்றினார்.

இந்த விழாவில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி, நாடகப்போட்டி, குழு நடனம் மற்றும் ரங்கோலிப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் 46 பள்ளிகளின் மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் பற்றிய பொது அறிவு வினா கேட்கப்பட்டு உடன் பரிசு வழங்கப்பட்டது. அனைவருக்கும் பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தினை உணர்த்தும் வண்ணம் மதிய உணவு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News