உள்ளூர் செய்திகள்

பஸ்சுக்கு காத்திருந்த பெண்ணின் நகை-பணம் திருட்டு

Published On 2023-04-02 14:12 IST   |   Update On 2023-04-02 14:12:00 IST
  • பஸ்சுக்கு காத்திருந்த பெண்ணின் நகை-பணம் திருட்டு நடந்தது.
  • இந்த கும்பலை போலீசார் கூண்டோடு பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலூர்

மேலூர் ஸ்டார் நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி மலர்விழி (42). இவர் சிங்கம்புணரி செல்வதற்காக மேலூர் பஸ் நிலையம் வந்து காத்திருந்தார். இவர் ரூ.8 ஆயிரம், கைச்செயின் ஒரு பவுன் மற்றும் 2 பவுனில் 2 மோதிரங்கள், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை ஒருமணிபர்சில் வைத்து அதனை கட்டைப்பையில் வைத்துக் கொண்டு வந்தார். பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் பின்பக்கமாக வந்து கட்டைபையில் இருந்த பர்சை திருடி சென்று விட்டனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்- இன்ஸ்பெக்டர் கேசவன், ஏட்டு தினேஷ்குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலூர் பஸ் நிலையத்தில் இதேபோன்று கட்பைப்பையில் கையை உள்ளே விட்டு திருடும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்த கும்பலை போலீசார் கூண்டோடு பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News