உள்ளூர் செய்திகள்

பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி

Published On 2022-06-12 09:48 GMT   |   Update On 2022-06-12 09:48 GMT
  • பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தீவிரம்.
  • ‘இல்லம் தேடி கல்வி மையம்” மூலம் மாலைநேர சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடந்தன.

மதுரை

தமிழகத்தில் கடந்த மாதம் 14-ந் தேதி பொது தேர்வு முடிந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ- மாணவிகளுக்கு ஜூன் 13-ந் தேதி (நாளை) முதல் பள்ளி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை திறக்கப்பட உள்ளன. ஒரு வாரமாக பள்ளி வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன. பள்ளியில் தூய்மை பணிகள், கட்டிடத்தின் உறுதி நிலை, சீரான மின்இணைப்பு, கழிவு நீர் தொட்டிகளை மூடுதல் ஆகிய பணிகளை தலைமை ஆசிரியர் மேற்பார்வையில் ஊழியர்கள் செய்தனர்.

மதுரை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 166 பள்ளிக்கூ டங்கள் உள்ளன. இங்கு 5 லட்சத்து 15 ஆயிரத்து 276 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். நாளை பள்ளி திறக்கும் நாள் அன்றே பாடபுத்தகங்கள் வழங்குவதற்கான ஏற்பாடு கள் நடந்து வருகின்றன. அன்றைய தினமே புதிய மாணவர் சேர்க்கையும் நடக்கிறது.மதுரை மாவட்டத்தில் 1-10ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு காலை 9.10 முதல், மாலை 4.10 வரை வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9 முதல் மாலை 4 வரை வகுப்புகள் நடைபெறும்.

பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டபோதிலும் 'இல்லம் தேடி கல்வி மையம்" மூலம் மாலைநேர சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடந்தன. மாணவர்கள் கல்வி கற்பதில் தயக்க நிலை- இடையூறு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News