உள்ளூர் செய்திகள்

புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் தற்கொலை

Published On 2023-04-25 14:15 IST   |   Update On 2023-04-25 14:15:00 IST
  • மதுரை அருகே புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் தற்கொலை செய்துெகாண்டனர்.
  • கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

மதுரை

அனுப்பானடி, மேல தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (36). கூலித் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. அவரது மகன் ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்தார். அப்போது முதல் வாசுதேவன் யாருடனும் பேசாமல் மன வேதனையில் இருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

மகபூப்பாளையம் அன்சாரி நகரை சேர்ந்த கண்ணன் மகன் பிரவீன் (23). இவருக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மனைவி கோபித்துக் கொண்டு, தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பிரவீன் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

வாழ்க்கையில் விரக்தி அடைந்த பிரவீன் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

கோசாகுளம் அருண் நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (65). இவருக்கு மகன் சரவணகுமார் உள்ளார். இவருக்கு உறவினர்கள் நீண்ட காலமாக மணப்பெண் தேடி வந்தனர். சரியாக வரன் அமையவில்லை. வாழ்க்கையில் விரக்தி அடைந்த மாரியப்பன், சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டில் சாணி பவுடரை குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News