உள்ளூர் செய்திகள்

31,750 மரக்கன்றுகள் நடும் திட்ட தொடக்க விழா

Published On 2023-08-12 08:01 GMT   |   Update On 2023-08-12 08:01 GMT
  • மதுரை மாவட்டத்தில் நடந்த 31,750 மரக்கன்றுகள் நடும் திட்ட தொடக்க விழாவில் கலெக்டர் பங்கேற்றார்.
  • அனைத்து ஊராட்சிகளிலும் மரக்கன்று நடும் பணி நடைபெறும்.

மதுரை

மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் என் மண் என் தேசம் நிகழ்ச்சி மூலமாக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மதுரை மாவட்டத்தில் உள்ள 420 கிராம ஊராட்சிகளில் 75 மரக்கன்றுகள் வீதம் 31,750 மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் ஆண்டாள் கொட்டாரம் கிராமத்தில் உள்ள பள்ளியில் மரக்கன்று நடும் பணியை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அரவிந்த், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, நேரு யுவகேந்திரா இணை இயக்குனர் செந்தில்குமார் உள்பட பல கலந்து கொண்டனர். அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள முன்னாள் ராணுவத்தினர் மற்றும் தியாகிகளின் பங்களிப்புடன் இந்த மரக்கன்று நடும் பணி நடைபெறும் என்றும், மேலும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளிலும் இந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News