உள்ளூர் செய்திகள்
- ரூபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பசுமை நாள் கொண்டாடப்பட்டது.
- விழா விற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் சங்கீதா வெங்க டேசன் செய்தி ருந்தார்.
மதுரை
மதுரை பழங்காநத்தத்தில் உள்ள ரூபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பசுமை நாள் கொண்டா டப்பட்டது. பள்ளியின் நிர்வாக அறங்காவலர் சாந்தாதேவி சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். தாளாளர் மற்றும் முதல்வர் நல்லாசிரியர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இயற்கை வளம் காத்தல், மரம் வளர்ப்பு மற்றும் சுற்றுப்புற சூழல் தூய்மை ஆகியவற்றை மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணமாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பசுமை நாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி மற்றும் பச்சை காய்கறிகளின் கண்காட்சி அணிவகுப்பு நடந்தது. விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. விழா விற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் சங்கீதா வெங்க டேசன் செய்தி ருந்தார்.