உள்ளூர் செய்திகள்

அன்னை பாத்திமா கல்லூரி பேராசிரியருக்கு நல்லாசிரியர் சுடர் விருது

Published On 2023-11-07 12:24 IST   |   Update On 2023-11-07 12:24:00 IST
  • அன்னை பாத்திமா கல்லூரி பேராசிரியருக்கு நல்லாசிரியர் சுடர் விருது வழங்கப்பட்டது.
  • மாணவர்களுக்கு அரசு வழங்கக்கூடிய கல்வி உதவித்தொகையை குறித்த காலத்தில் கிடைப்பதற்கும் உதவி செய்து வருகிறார்.

திருமங்கலம்

திருச்சி மாவட்டம் குளித்தலை தமிழ்ச் சங்கம் ஒவ்வொரு வருடமும் சிறந்த ஆசிரியர்களை தேர்ந் தெடுத்து அவர்களுக்கு "நல்லாசிரியர் சுடர்" விருது வழங்கி வருகிறது. கடந்த கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த நல்லாசிரியர் சுடர் விருது வழங்கும் நிகழ்ச்சி இந்த வருடம் முதல் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது.

திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் துறை தலைவராகவும், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலராகவும் பேராசிரியர் முனியாண்டி பணி யாற்றி வருகிறார்.

இவர் நாட்டு நல பணித் திட்டத்தின் மூலம் கல்லூரிக்கு அருகில் உள்ள மைக்குடி, ஜம்பலபுரம், அ.தொட்டியபட்டி ஆகிய கிராமங்களை தத்தெடுத்து நாட்டு நல பணித்திட்ட மாணவர்களுடன் இணைந்து கிராம மக்க ளுக்கு தொண்டாற்றி வருகிறார். மாணவர்களுக்கு அரசு வழங்கக்கூடிய கல்வி உதவித்தொகையை குறித்த காலத்தில் கிடைப்பதற்கும் உதவி செய்து வருகிறார். இவரது சேவைகளை பாராட்டி திருச்சி மாவட்டம் குளித்தலை தமிழ்ச்சங்கம் நல்லாசிரியர் சுடர் விருது வழங்கி கவுரவித்தது.

விருது பெற்ற பேராசிரி யர் முனியாண்டியை கல்லூரி தாளாளர் எம்.எஸ். ஷா, பொருளாளர் ஷகிலா ஷா, முதல்வர் டாக்டர். அப்துல் காதிர், பேராசிரியர்கள் ராமுத்தாய், சிங்கராஜா, ராஜேஸ்வரி, இன்பமேரி, ஜோதி மற்றும் ஆறுமுக ஜோதி ஆகியோர் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

Similar News