உள்ளூர் செய்திகள்

மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்: அமைச்சர் வழங்கினார்

Published On 2022-08-12 08:43 GMT   |   Update On 2022-08-12 08:43 GMT
  • அலங்காநல்லூரில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.
  • கூடைப்பந்து விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

அலங்காநல்லூர்

அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை விழிப்புணர்வு வார விழாவையொட்டி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை தாங்கினார்.

அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் மாணவர்கள் போதை தடுப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட கல்வி அலுவலர் பொன் விஜயா, சுகாதார பணிகள் துறை துணை இயக்குநர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட, மாநில, தேசிய அளவில் கூடைப்பந்து விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி, தலைமை ஆசிரியர்கள் பிராக்ரன்ஸ் லதா, (பொறுப்பு) சுதா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் கென்னடி கண்ணன், பரந்தாமன், செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் ஜுலான் பானு, பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணை சேர்மன் சுவாமிநாதன், நகர செயலாளர் ரகுபதி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News