உள்ளூர் செய்திகள்

காண்ட்ராக்ட் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி

Published On 2022-10-01 09:04 GMT   |   Update On 2022-10-01 09:04 GMT
  • பிரதமர் திட்டத்தில் வீடுகட்ட காண்ட்ராக்ட் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
  • இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூரை சேர்ந்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை

திருப்பூரை சேர்ந்த ராஜசேகர் என்பவர், பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் பிரதம மந்திரி அவாஸ் யோஜன திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வீடு கட்டி தருவதாக கூறி புரோக்கர்கள் மூலம் காண்ட்ராக்டர்களை வரவழைத்து, ரூ.50 லட்சம் முன்பணம் கட்டுபவர்களுக்கு 1000 வீடுகள் கட்டி தருவதற்கான காண்டிராக்ட் பெற்று தரப்படும் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

இதனை நம்பி மதுரை சம்பகுளத்தைச் சேர்ந்த சிவரத்தினம் (வயது 65) என்பவர் 50 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்தி உள்ளார். இதனைப் பெற்றுக் கொண்ட ராஜசேகர் ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி காண்டிராக்ட் பெற்று தரவில்லை.

எனவே சிவரத்தினம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். அப்போது ராஜசேகர் காசோலைகளை கொடுத்து உள்ளார். அது வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. சிவரத்தினம் இது தொடர்பாக மதுரை மாநகர குற்றப் புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News