உள்ளூர் செய்திகள்

மனைவி பெயரில் ரூ.18 லட்சம் கடன் வாங்கி மோசடி

Update: 2022-08-15 09:38 GMT
  • மனைவி பெயரில் ரூ.18 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்த வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை திருநகரை சேர்ந்தவர் பழனியப்பன். இவர் பரவை மீனாட்சி மில் காலனியைச் சேர்ந்த வேறு சமுதாயத்தை சேர்ந்த பெண் ஒருவரை சென்னைக்கு கடத்திச் சென்று விட்டார். அவர் அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு, சென்னை மதனந்தபுரம், கிருஷ்ணா நகரில் குடும்பம் நடத்தி வந்தார்.

அப்போது பழனியப்பன் மனைவியின் பெயரில் ரூ.18 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.

அதனை அவர் திரும்பி செலுத்தவில்லை. இந்த நிலையில் பழனியப்பன் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்து உள்ளார்.

மேலும் பழனியப்பன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News