உள்ளூர் செய்திகள்
- டெய்லர் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
- ரூ.5 லட்சம் ஆடைகள் எரிந்து சேதமானது.
மதுரை
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 6-வது பஸ் நிறுத்தத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜன்(வயது52). இவர் விளாச்சேரி பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் மறுநாள் அதிகாலையில் கடையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இைத பார்த்த அப்பகுதி மக்கள் ஆனந்தராஜனுக்கும், திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடையை திறந்து தீயை பல மணி நேரம் போராடி அணைத்தனர். இருப்பினும் கடையில் இருந்த ஆடைகள், தையல் எந்திரங்கள் போன்றவை எரிந்து சேதமாகின. இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.