உள்ளூர் செய்திகள்

அரசு தொடக்கப்பள்ளிக்கு கல்வி உபகரணங்கள்

Published On 2023-09-09 13:40 IST   |   Update On 2023-09-09 13:40:00 IST
  • அரசு தொடக்கப்பள்ளிக்கு ரூ.2½ லட்சம் கல்வி உபகரணங்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.
  • திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதய குமாரிடம் கோரிக்கை வைத்தனர்.

திருமங்கலம்

திருமங்கலம் அருகே கண்டுகுளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ெதாடக்கப்பள்ளி உள்ளது. இதில் கிராமத்தைச் சுற்றி யுள்ள 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கிராமப்புற பகுதி என்பதால் அரசு தொடக்கப் பள்ளியில் கல்வி பயில்வதற்காக பள்ளிக் குழந்தைகள் உட்காருவதற்காக மேஜை, நாற்காலிகள் இல்லாமல் தரையில் அமர்ந்து கல்வி பயின்று வந்துள்ளனர்.

இது தொடர்பாக திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதய குமாரிடம் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து கண்டுகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஆர்.பி. உதயகுமார் நேரில் வருகை புரிந்தார்.

தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தேசிய கொடி ஏற்றி வைத்தார். மேலும் கிர்டிட் அக்ஸஸ் கிராமீன் லிமிடெட் சார்பில் ரூ.2½ லட்சம் மதிப்பிலான இருக்கைகள் மேஜைகள் மற்றும் கல்வி உபகரண பொருட்களை சட்டமன்ற ஆர்.பி. உதய குமார் பள்ளிக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியின் போது நிர்வாகிகள் முருகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், ஒன்றிய செய லாளர் அன்பழகன், டிரஸ்ட் மண்டல மேலாளர் ஸ்ரீனிவாச ஆஞ்சிநேய ரெட்டி பிரிவு மேலாளர் பாஸ்கரன், திட்டமிடல் கண்காணிப்பு குழு பிரசாந்த், ராம்குமார், பிரதீப், நிர்வாகத்துறை வேலு உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News