ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மணிமாறன் பேசினார்.
- திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
- மக்களவைத் தொகுதியில் வெற்றி பெறச்செய்ய நாம் தற்போது இருந்து தேர்தல் பணி செய்ய வேண்டும் என்று மாவட்ட செயலாளர் பேசினார்.
திருப்பரங்குன்றம்
மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலாஜி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கி பேசியதாவது:- தமிழக அரசு பெண்களுக்கு இலவச பஸ் வசதி வீடு தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.
விரைவில் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 1000 வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே தமிழக அரசு அறிவித்தபடி தேர்தல் வாக்குறுதிகள் 75 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் எதிர்க்கட்சியினர் மக்களிடம் தவறான பிரசாரத்தை செய்து வருகிறார்கள். அவர்களின் பொய் பிரசாரத்தை முறியடிக்க வீடு தோறும் திண்ணைப் பிரசாரம் செய்து நமது அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி அதற்கான பணிகளை தற்போது இருந்து நீங்கள் பார்க்க தொடங்குங்கள். கடந்த தேர்தலில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்றோம். தற்போது நாம் ஆளுங்கட்சியாக இருக்கும் நிலையில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நமது வேட்பாளரை விருது நகர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெறச் செய்ய நாம் தற்போது இருந்து தேர்தல் பணி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஏர்போர்ட் பாண்டி, மகிழன், பகுதி செயலாளர் உசிலை சிவா, கிருஷ்ணபாண்டி, அணி அமைப்பாளர்கள் விமல், ஆலங்குளம் செல்வம், தென்பழஞ்சி சுரேஷ், பெருங்குடி வசந்த், கருவேலம்பட்டி வெற்றி உள்பட பலர் கலந்து கொண்டனர்.