உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். அருகில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் வெற்றிவேல், நெல்லை பாலு உள்ளிட்ட பலர் உள்ளனர்.

வைகை ஆற்றில் மூழ்கி பலியான 3 பேர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்-ஆர்.பி.உதயகுமார்

Published On 2023-05-06 08:50 GMT   |   Update On 2023-05-06 08:50 GMT
  • வைகை ஆற்றில் மூழ்கி பலியான 3 பேர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
  • இந்தியாவை திரும்பிப் பார்க்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி நடத்தி காட்டுவார்.

மதுரை

மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் 3-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பார்வையற்றோ ருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை எஸ்.எஸ்.காலனியில் நடைபெற்றது.

அட்சய பாத்திர நிறுவனர் நெல்லை பாலு தலைமை தாங்கினார். நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இதில் மாநில அம்மா பேரவை துணைச் செயலா ளர் வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் ஆர்.பி.உதய குமார் பேசியதாவது:-

வைகை நதிக்கரையில் கள்ளழகர் ஆற்றிலே இறங்கி மக்களுக்கு அருளாசி வழங்கிய நிகழ்வு மதுரை யிலே சீரும் சிறப்போடும் நடைபெற்றது. இந்த நிகழ்விலே பல்வேறு பாது காப்பு நடவடிக்கைக ளையும் தாண்டி துரதிஷ்ட வசமாக 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த ஒரு சம்பவம் நடந்தது வருந்தத்தக்கது. இதில் ஒருவர் மூச்சுதிணறி உயிரிழந்துள்ளார். எனவே இவர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

2 ஆண்டுகளில் தி.மு.க. சாதனை செய்ததாக முதல் -அமைச்சர் ஸ்டாலின் பறைசாற்றி கொள்கிறார்.ஆனால் இதிலே நாம் ஆராய்ந்து பார்த்தால் இந்த 2 ஆண்டுகளிலே தி.மு.க. அரசு சாதித்ததை காட்டிலும் சரிக்கியது தான் அதிகம்.இன்றைய தி.மு.க. அரசு வெற்றி பெற்றது 30 சதவீதம் என்றால், தோல்வி பெற்றது 70 சதவீதமாக உள்ளது.

எம்.ஜி.ஆர். 5-வது உலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் நடத்திக் காட்டினார். அவருடைய வழியில் ஜெயலலிதா வெற்றி மாநாட்டை நடத்தினார். உலகப்பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மதுரையில் நடைபெறும். உலக பிரசித்தி பெற்ற சித்தரை திருவிழா அதேபோன்று மதுரையிலே ஆகஸ்ட் 20-ந் தேதி நடை பெறும். அ.தி.மு.க. மாநாடு இந்தியாவை திரும்பிப் பார்க்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி நடத்தி காட்டுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News