உள்ளூர் செய்திகள்

உதவித்தொகையை தியாகிகளின் பேரன்-பேத்திகளுக்கும் அரசு சலுகை வழங்க கோரிக்கை

Published On 2023-08-17 13:44 IST   |   Update On 2023-08-17 13:44:00 IST
  • தியாகிகளின் பேரன்-பேத்திகளுக்கும் அரசு சலுகை வழங்க வேண்டும் என வாரிசுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • அவர்களது மகன்களும் 60 முதல் 70 வயதை கடந்து விட்டனர்.

மதுரை

தமிழ்நாடு சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் அமைப்பின் தலைவர் விஜயராகவன் தமிழக முதலமைச்சரின் தனிச்செயலாளரிடம் வழங்கிய கோரிக்கை மனு வில் கூறியிருப்பதாவது-

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுதந்திர போ ராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகளுக்கு தமிழக அரசு வழங்கிய உதவித் தொகையினை உயர்த்தி வழங்கி உத்தர விட்டதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

சுதந்திர போராட்ட தியாகிகள் மத்திய, மாநில அரசுகள் வழங்கி வரும் உதவி தொகையை தவிர வேறு எந்த சலுகையும் பெறவில்லை.

நாடு சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் நிறை வடைந்துள்ளதால் தியாகிகளுக்கு தற்போது 100 வயதை தாண்டி விட்டது. அவர்களது மகன்களும் 60 முதல் 70 வயதை கடந்து விட்டனர். மேலும் தமிழ்நாட்டில் தற்போது தியாகிகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது எனவே தியாகி களின் வாரிசுகளுக்கு மத்திய மாநில அரசு வழங்கும் சலுகைகளை தியாகிகளின் பேரன், பேத்திகளுக்கும் வழங்க வேண்டும்.

தியாகிகளுக்கு எண்ணற்ற நலத்திட்ட ங்களை வழங்கிய கலை ஞரின் வழியில் நல்லாட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசு களின் கோரிக்கையை கனிவுடன் நிறைவேற்றி தர வேண்டும்.

மேலும் மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் ஆலய பிரவேசம் நடத்திய தியாகி வைத்தியநாத அய்யருக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்.

மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள தீரர் சத்தியமூர்த்தி மார்பளவு சிலையை முழு உருவ வெண்கல சிலையாக அமைத்து தர வேண்டும். அரசு சார்பில் நியமிக்கப் படும் வாரியங்கள் மற்றும் ஆணைய பொறுப்புகளில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். தியாகிகளுக்கு தமிழக அரசு வழங்கி வரும் மருத்துவப்படியை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். கல்வி வேலை வாய்ப்பு ஆகியவற்றில் தியாகிகளின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News