உள்ளூர் செய்திகள்

மதுரையில் நடந்த  நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி குத்துவிளக்கு ஏற்றினார்.

மக்களின் தேவையறிந்து முதல்வர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்: அமைச்சர் மூர்த்தி பேச்சு

Published On 2022-11-22 09:04 GMT   |   Update On 2022-11-22 09:04 GMT
  • மக்களின் தேவையறிந்து முதல்வர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் மூர்த்தி பேசினார்.
  • வீடுதோறும் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது தற்காலிகமாக தான்நடந்து உள்ளது.

மதுரை

மதுரை ஆனையூர் பகுதிக்கான குடிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

மதுரையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த திட்டம் 2006-ம் ஆண்டு தமிழக முதல்வராக கலைஞர் இருந்தபோது தொடங்கப்பட்டது. 2010-ம் ஆண்டு திட்டம் முடிவடைந்த நிலையில் சிறு, சிறு தவறுகளினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்று இத்திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். மேலும் திட்டத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு வீடுதோறும் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது தற்காலிகமாக தான்நடந்து உள்ளது.

முழுமையாக இப்பகுதியில் பாதாள சாக்கடைகள் அமைக்கப்பட்ட பின்னர் நிரந்தரமாக மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும். மக்களின் தேவைகளை அறிந்து முதல்வர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ் சேகர், சோழவந்தான் எம்.எல்.ஏ., வெங்கடேசன், மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் சிங், மண்டல தலைவர் வாசுகி சசிகுமார், தி.மு.க. நிர்வாகிகள் மருது பாண்டி, சசிகுமார், செல்வகணபதி கணேஷ், ரோகிணி பொம்மதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News