உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற போது எடுத்த படம்.

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

Published On 2023-07-12 12:57 IST   |   Update On 2023-07-12 12:57:00 IST
  • சோழவந்தானில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
  • சமூக ஆர்வலர் பிரேமலதா உறுதிமொழி வாசித்தார்.

சோழவந்தான்

சோழவந்தானில் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி-சி.பி.எஸ்.இ மாணவர்கள் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தினர். இந்த பேரணி நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் ஜூடி தலைமை தாங்கினார்.

உதவி தலைமை ஆசிரியை அபிராமி, ஒருங்கிணைப்பாளர்கள் சுபா, ரெய்னாபேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சோழவந்தான் அரசுஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் தீபா விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலர் பிரேமலதா உறுதிமொழி வாசித்தார். அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்தப் பேரணி சோழவந்தான் பேருந்து நிலையத்திலிருந்து வட்டப்பிள்ளையார் கோவில், ஜெனகை மாரியம்மன், தபால் அலுவலகம் வழியாக ஊர்வலமாக வந்து தொடங்கிய இடத்தில் பேரணி வந்து சேர்ந்தனர். இதில் ஆசிரியர், ஆசிரியைகள் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பங்கேற்றனர். பள்ளி மக்கள் தொடர்பு அலுவலர் விவிதா நன்றி கூறினார்.

Tags:    

Similar News