உள்ளூர் செய்திகள்

ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. மதுைர இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் தலைமையில் 110 படி சாதம் தயார் செய்யப்பட்டு சிவனுக்கு படைக்கப்பட்டது. அன்னாபிஷேக அலங்காரத்தை காண திரண்ட பக்தர்கள்.

சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்

Published On 2022-11-08 08:42 GMT   |   Update On 2022-11-08 09:43 GMT
  • மதுரையில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
  • சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில் நடைகள் சாத்தப்பட்டன.

மதுரை

ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சிவன் கோவிலில் நேற்று மற்றும் இன்று அன்னாபிஷேக வழிபாடு நடைபெற்றது. மதுரை நகரில் உள்ள பெரு ம்பாலான கோவில்களில் இன்று காலை அன்னாபிஷேக நிகழ்ச்சி நடந்தது.

மதுரை மேலமாசி வீதியில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு நன்மை தருவாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 110 படி சாதம் தயாரிக்கப்பட்டு சிவலிங்கத்திற்கு அலங்கரிக்கப்பட்டு தீபா ராதனை காட்டப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அலங்காரம் களைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தெப்பக்குளத்தில் உள்ள முக்தீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. சாதத்தால் சிவலிங்கம் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

இதே போல் நகரில் உள்ள பெரிய மற்றும் சிறிய அளவிலான சிவன் கோவில்களில் இன்று காலையிலேயே அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில் நடைகள் சாத்தப்பட்டன.

Tags:    

Similar News