உள்ளூர் செய்திகள்

புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் கள்ளழகர் கோவில் ராஜகோபுரம.

புதுப்ெபாலிவுடன் காட்சி தரும் அழகர்கோவில் ராஜகோபுரம்

Published On 2023-09-01 08:15 GMT   |   Update On 2023-09-01 08:15 GMT
  • கும்பாபிஷேகத்திற்காக புதுப்ெபாலிவுடன் அழகர்கோவில் ராஜகோபுரம் காட்சியளிக்கிறது.
  • விரைவில் கள்ளழகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

மதுரை

ஆழ்வார்களால் பாடப்பெற்ற சிறப்புடையது மதுரை அழகர்கோவில். மேலும் 108 வைணவ திருக்கோவில்களில் ஒன்றாகவும், பாண்டிய நாட்டின் 18 வைணவ கோவில்களில் சிறப்பு வாய்ந்ததாகவும் அழகர் கோவில் கருதப்படுகிறது.

இந்த கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ரூ.1.5 கோடி செலவில் பணிகள் மும்முர மாக நடந்து வருகிறது. இதற்காக கடந்த மார்ச்

13-ந் தேதி கோபு ரங்களுக்கு பாலாலயம் நடந்தது. அதனை ெதாடர்ந்து கும்பாபிஷேக பணிகள் தொடர்ந்து நடைபெற்று தற்போது முடியும் தரு வாயில் உள்ளது. இந்த கோவில் கோபுரமானது சுண்ணாம்பு, கருப்பட்டி, கடுக்காய் உள்ளிட்ட கலவை கள் கொண்டு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலின் ராஜகோபுரம் 120 அடி உயரத்துடன் 7 நிலைகளை கொண்டது. இதில் கலைத்திறன் மிக்க 628 சுதை சிற்பங்கள் உள்ளன கோபுரத்தின் உச்சியில் 6¼ அடி உயரம் கொண்ட 7 கலசங்கள் உள்ளன.

தற்போது இந்த கோபுரத்தில் திருப்பணிகள் முடிந்து பொலிவுடன் காட்சியளிக்கிறது.

இதனை கோவில், அழகர் மலைக்கு வரும் பக்தர்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். விரைவில் கள்ளழகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்த நிலையில் மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த கிராமத்தினர் கும்பாபிஷேகத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags:    

Similar News