உள்ளூர் செய்திகள்

மதுரை மாநகராட்சி 1-வது மண்டலத்திற்கு உட்பட்ட குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளிடம் கோரிக்கை மனுக்களை அமைச்சர் மூர்த்தி பெற்றார். அருகில் கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், மண்டலத்தலைவர் வாசுகி சசிகுமார், துணை மேயர் நாகராஜன் ஆகியோர் உள்ளனர்.

78 புதிய சாலை அமைக்கும் பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்கும்-அமைச்சர் பேச்சு

Published On 2023-11-09 08:49 GMT   |   Update On 2023-11-09 08:49 GMT
  • மதுரை கிழக்கு தொகுதியில் 78 புதிய சாலை அமைக்கும் பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்கும்.
  • இந்த தகவலை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரை

மதுரை மாநகராட்சி 1-வது மண்டல அலுவல கத்தில் குடியிருப்போர் நலச்சங்கங்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கலெக்டர் சங்கீதா,மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் நாகராஜன், மாநக ராட்சி ஆணையாளர் மதுபாலன், உதவி கலெக்டர் சவுந்தர்யா, மதுரை மாவட்ட கூட்டுறவு இணைப்பதி வாளர் குருமூர்த்தி, அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ. டாக்டர் சரவணன், டி.ஆர்.ஓ. சக்திவேல், மண்டலத் தலைவர் வாசுகி சசிகுமார், கவுன்சிலர்கள் ரோகினி பொம்மத்தேவன், செல்வ கணபதி, ராமமூர்த்தி, பால் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-

மக்களின் கோரிக்கை களை நிறைவேற்றுவதே இந்த அரசின் தலையாய கடமையாக இருக்கிறது. இந்த தொகுதியில் ஒரு கோடியே ரூ. 40 லட்சம் மதிப்பில் புதிதாக 78 சாலைகள் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த பணிகள் இன்னும் ஓரிரு நாள்களில் நடை பெறும். விடுபட்ட பகுதிகளில் 200 மீட்டர் பாதாள சாக்கடை அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. அந்தப் பணிகளும் விரைவாக முடிக்கப்படும்.

எவ்வளவு கடன் சுமை இருந்தாலும் மக்கள் திட்டங்களை நிறைவேற்று வதில் மிகுந்த அக்கறை உள்ள அரசாக முதல்வர் மு. க. ஸ்டாலினின் அரசு இருக்கிறது.

மேலமடை பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப் பட்டு புதிய சாலை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. கிழக்கு தொகுதியில் உள்ள 7 கண்மாய்களில் நடை பாதை அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. அந்த பணிகளும் நடைபெற உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் மக்களின் தேவையை அறிந்து பணி செய்ய வேண்டும். மக்களின் கோரிக்கைகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

நிகழ்ச்சியில் மதுரை வடக்கு தி.மு.க. பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், பகுதி செயலாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News