உள்ளூர் செய்திகள்

விபத்தில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சிவகங்கை

எம்.எல்.ஏ. செந்தில்நாதன் நேரில் பார்த்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். 

படுகாயமடைந்த 3 பெண்களுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Published On 2023-04-04 07:46 GMT   |   Update On 2023-04-04 07:46 GMT
  • படுகாயமடைந்த 3 பெண்களுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
  • அவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர்.

மதுரை

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் இருந்து அரசு பஸ் பயணிகளுடன் நேற்று மதியம் மதுரைக்கு வந்து கொண்டிருந்தது.

சிவகங்கையை அடுத்த பூவந்தி அருகே உள்ள குயவன்வலசை பகுதியில் வந்தபோது பஸ்சும், எதிரே சிமெண்டு மற்றும் செங்கல் ஏற்றிக்கொண்டு வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு ள்ளானது.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் கீழக்கோட்யையை சேர்ந்த திருப்பதி(வயது60), சிவகங்கையை அடுத்த ராகினிப்பட்டியை சேர்ந்த கங்கா(24), மீமிசல் பகுதியை சேர்ந்த நாகஜோதி(45) ஆகிய 3பேர் பரிதாபமாக இறந்தனர்.

நாட்டரசன் கோ ட்டையை சேர்ந்த திவ்யா(29), அரசு பஸ் டிரைவர் ஈஸ்வரன், கண்டக்டர் சந்திரன், ஆர்.எஸ்.மங்கலம் எல்லம்மா ள்(70), கொந்தசாமி(65), சிவகங்கை குமரன் தெரு வெங்க டேசன்(22), முத்து நகர் ஆனந்தவல்லி(18), திருபுவனம் வன்னி க்கோட்டை பால முருகன்(50) உள்பட 14பேர் காயமடை ந்தனர்.

அவர்களில் சிலர் சிவகங்கை அரசு ஆஸ்ப த்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் ஆர்.எஸ்.மங்கலம் பிச்சம்மாள்(57), சிவகங்கை ஞானப்பழம்(52), பூவந்தி சாந்தா(57) ஆகிய 3 பேருக்கு கை- கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

எனவே அவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News