உள்ளூர் செய்திகள்

பெண் உள்பட 3 பேர் தற்கொலை

Update: 2022-10-06 09:53 GMT
  • மதுரை அருகே பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • இது குறித்து திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை பொன்மேனி பகவத்சிங் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 37). பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்த இவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முத்துக்குமார் மாடி அறைக்கு சென்று பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நரிமேடு சோனை யர்கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜீவா. இவரது மனைவி நித்யா (24). கணவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்ததால் நித்யா கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது.

வாழ்க்கையில் விரக்தியடைந்த நித்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநகர் திருமலை தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் சோபனா (25). இவரது தாய்க்கு நோய் பாதிப்பு இருந்தது. இதனால் கவலையில் இருந்த சோபனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News