உள்ளூர் செய்திகள்

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் அனீஷ்சேகர் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். 

மதுரை மாவட்டத்தில் 26,35,238 வாக்காளர்கள்

Published On 2023-01-05 09:47 GMT   |   Update On 2023-01-05 09:47 GMT
  • மதுரை மாவட்டத்தின் மொத்த வாக்காளர் பட்டியலில் 26,35,238 பேர் இடம் பெற்றிருந்தனர்.
  • சோழவந்தான் (தனி) தொகுதியில் குறைந்த பட்சமாக 2,18,72 வாக்கா ளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மதுரை

மதுரை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது. அதன்படி மதுரை மாவட்டத்தின் மொத்த வாக்காளர் பட்டியலில் 26,35,238 பேர் இடம் பெற்றிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து மதுரையில் 4 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்ப ட்டன. அப்போது 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், இந்த முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் அனை த்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது. அதனை மாவட்ட கலெக் டர் அனீஷ்சேகர் வெளி யிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 26,49,793 ஆகும். இதில் 13,2,834 பேர் ஆண்கள். 13,46,733 பேர் பெண்கள், 226 பேர் 3-ம் பாலினத்தவர் ஆவர். மதுரை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 26,35,238 ஆக இருந்தது. 2023-ம் ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 26,49,793 ஆக உள்ளது. இதில் 13,2,834 பேர் ஆண்கள். 13,46,733 பேர் பெண்கள். 226 பேர் 3-ம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் இன்று வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியல் விவரப்படி 38,509 பேர், புதிதாக சேர்க்கப்பட் டுள்ளனர். அடுத்தபடியாக 23,954 பேர் இறப்பு, இடமாற்றம், ஒருமுறைக்கும் மேலான பதிவுகள் ஆகியவற்றின்படி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக மதுரை கிழக்கு சட்டசபை தொகுதியில் 3,28,270 பேர் உள்ளனர். சோழவந்தான் (தனி) தொகுதியில் குறைந்த பட்சமாக 2,18,72 வாக்கா ளர்கள் இடம்பெற்றுள்ள னர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News