உள்ளூர் செய்திகள்

தரையில் படுத்து உருண்டு தர்ணாவில் ஈடுபட்ட பா.ஜ.க. பிரமுகர்.

சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் தரையில் படுத்து உருண்டு பா.ஜ.க. பிரமுகர் தர்ணா

Published On 2022-12-17 14:10 IST   |   Update On 2022-12-17 14:10:00 IST
  • குப்பை கொட்டிய விவகாரத்தில் அருகில் இருந்தவர்கள் சுப்பிரமணியனை தாக்கியதாக கூறப்படுகிறது.
  • சுப்பிரமணியன் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் படுத்து உருண்டு, தர்ணா ஈடுபட்டார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் மேல செக்கடி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் பா.ஜ.க. வர்த்தக அணி நகர துணை தலைவராக உள்ளார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் இருந்தபோது அவரது வீட்டின் அருகே குப்பை கொட்டிய விவகாரம் தொடர்பாக அருகில் இருந்தவர்கள் சுப்பிரமணியனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிகிச்சைக்காக சுப்பிரமணியன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சுப்பிரமணியன் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் படுத்து உருண்டு, தர்ணா ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் பா.ஜ.க. நகர தலைவர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் விக்னேஷ், அந்தோணி ராஜ், சங்கர் உள்ளிட்ேடார் அங்கு திரண்டனர். இதைத்தொடர்ந்து சுப்பிரமணியன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

Tags:    

Similar News