உள்ளூர் செய்திகள்
தங்கை உறவுமுறையிலான பெண்ணுடன் காதல் பெற்றோர் கண்டித்ததால் எலிபேஸ்ட்டை சாப்பிட்ட வாலிபர்
- சூர்யா (வயது 21). இவர் மீன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
- பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு பெண்ணை சூர்யா காதலித்ததாக கூறப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஜாகீர் சின்னம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 21). இவர் மீன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு பெண்ணை சூர்யா காதலித்ததாக கூறப்படு கிறது. மேலும் அந்த பெண், அவருக்கு தங்கை உறவு முறை ஆகும். இதனால் சூர்யாவை பெற்றோர் கண்டித்தனர்.
இதனால் மனமுடைந்த சூர்யா, எலி பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள், அவரை மீட்டு அந்த பகுதி யில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சூர மங்கலம் போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.