கோப்பு படம்
காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை
- காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது
- வாலிபரின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பாகாநத்தம் அருகில் உள்ள தோப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் தினேஷ்குமார் (வயது 26). இவர் கோவையில் உள்ள மில்லில் வேலை பார்க்கும் பொழுது பூமிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனால் பழனிச்சாமி குடும்பத்தினர் அவரை குடும்பத்துடன் சேர்த்துக் கொள்ளாததால் பொள்ளாச்சியில் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது சொந்த ஊரான தோப்பூருக்கு தினேஷ்குமார் வந்தார். பின்னர் தனது வீட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டகையில் உள்ள இரும்பு கம்பியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தினேஷ் குமாரின் தந்தை பழனிச்சாமி எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சத்திய பிரபா ஆலோசனைப்படி சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.