உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் புறநகர் பகுதியில் லாட்டரி டிக்கெட் விற்பனை அமோகம்

Published On 2022-08-21 07:41 GMT   |   Update On 2022-08-21 07:41 GMT
  • விழுப்புரம் புறநகர் பகுதியில் லாட்டரி டிக்கெட் அமோகமாக விற்பனை செய்யப்பட்டது.
  • போலீசார் சிறுவந்தாடு அருகே மந்தக் கடை பகுதிகளில் சோதனை செய்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வ தாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதாவிற்கு தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் எஸ்.பி ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெ க்டர் அன்பழகன் தலை மையிலான போலீசார் சிறுவந்தாடு அருகே  மந்தக்கடை பகுதிகளில் சோதனை செய்தனர். அப்போது மந்தகடை பகுதியில்உள்ள பாரதி தாசன் என்பவரது டீக்கடையில்அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரிசீட்டுகள் மறைத்து வைத்துவிற்பனை செய்வது தெரிய வந்தது. வளவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாரதிதாசன் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து புறநகர் பகுதியில் லாட்டரி விற்பனைநடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News