உள்ளூர் செய்திகள்

காரைக்காலில் தொலைந்துபோன ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் திருட்டு பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார்

Published On 2023-07-20 07:05 GMT   |   Update On 2023-07-20 07:05 GMT
  • தன் கைப்பையில் வைத்திருந்த 3 ஏ.டி.எம். கார்டுகளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • தாமதமாக கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கீதா, இது குறித்து, திருநள்ளாறு போலீசில் புகார் அளித்துள்ளார்.

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு கமலாம்பாள் வீதியைச்சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சங்கீதா (வயது 37). இவர், கடந்த 10-ந் தேதி கும்பகோணத்திற்கு பஸ்சில் சென்று விட்டு, அன்று மாலை திருநள்ளாறு திரும்பி கொண்டிருந்தார். வீடு சென்று பார்த்தபோது, தன் கைப்பையில் வைத்திருந்த 3 ஏ.டி.எம். கார்டுகளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து, குறிப்பிட்ட வங்கிக்கு சங்கீதா சென்று கார்டை பிளாக் செய்ய சொல்லியதாக கூறப்படுகிறது. ஆனால், அன்றைய தினமே, ரூ.40 ஆயிரம், 11-ந் தேதி ரூ.40 ஆயிரம், 12-ந் தேதி ரூ.40 ஆயிரம், 13-ந் தேதி ரூ.40 ஆயிரம் என 4 நாட்கள் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணம் எடுத்ததாக சங்கீதாவின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை தாமதமாக கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கீதா, இது குறித்து, திருநள்ளாறு போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News