காரைக்காலில் வட்டார வளர்ச்சி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
- முறைகேடுகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி வட்டார வளர்ச்சி ஊழியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
புதுச்சேரி:
காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி வட்டார வளர்ச்சி ஊழியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க தலைவி சுவிதா தலைமை தாங்கினார். செயலாளர் வசந்தி, புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளன கௌரவ தலைவர் பிரேமதாசன், காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஏழை எளிய சுய உதவிக்கு குழு உறுப்பினர்களின் வட்டி பணத்தை எடுத்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க ஆரம்பித்தால், அது கூட்டமைப்பில் பிரச்னையை உருவாக்கி, நாளடைவில் பஞ்சாயத்து கூட்டமைப்பே நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்படும். எனவே, முறைகேடுகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முடிவில் சங்க பொருளாளர் சசிகலா நன்றி கூறினார்.