லைவ் அப்டேட்ஸ்: செஸ் ஒலிம்பியாட்... நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்ட தொடக்க விழா
கமல்ஹாசனின் குரலில் தமிழ்நாட்டின் கலாசார வளர்ச்சி குறித்த நிகழ்த்துக்கலை நடைபெற்றது. 1200 ஆண்டுகளுக்கு முன் மயிலாடும்பாறையில் தமிழர் கலை, கலாசாரம் செழித்து இருந்ததற்கான சான்று முதலாம் நூற்றாண்டில் கரிகால சோழன் கல்லணை கட்டியது குறித்து முப்பரிமாண படத்துடன் விளக்கமளிக்கப்பட்டது.
பிரதமர் மோடிக்கு மாமல்லபுரம் சிற்பத்திலான நினைவுப் பரிசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் அமைச்சர் மெய்யநாதன் வரவேற்புரை அற்றி வருகிறார். அப்போது, பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரை அமைச்சர் வரவேற்றார். மேலும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், எல்.முருகன் ஆகியோரையும் அமைச்சர் வரவேற்று உரையாற்றினார்.
44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்கு வருகை தந்த பிரதமர் மோடியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டதை அடுத்து, தமிழ் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பிரதமர் வருகை தந்துள்ளார். சதுரங்க கரை பதித்த வேட்டி, சட்டையில் வந்த பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க சென்னை வந்த பிரதமர் மோடி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளம் சென்றார். அங்கிருந்து சாலை மார்க்கமாக விழா அரங்கிற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வழிநெடுகிலும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை மணல் ஓவியத்தில் வரைந்து அனைவரையும் கவர்ந்தார் ஓவியர் சர்வம் படேல்.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், கண்ணைக் கவரும் மணல் ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார் ஓவியர் சர்வம் படேல். இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் பியானோவின் பின்னணி இசையில், மணற் ஓவியம் வரைந்து வருகிறார் ஓவியர் சர்வம் படேல்.
ஒலிம்பியாட் தொடக்க விழாவின் இசை நிகழ்ச்சியில், கண்களை கட்டிக் கொண்டு இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் பியானோ வாசித்து அசத்தினார்.