என் மலர்
உள்ளூர் செய்திகள்

லைவ் அப்டேட்ஸ்: செஸ் ஒலிம்பியாட்... நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்ட தொடக்க விழா
- 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.
- 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்
Live Updates
- 28 July 2022 7:31 PM GMT
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மோடி 'விருந்தோம்பல்' குறித்த சிறப்பினை திருக்குறள் மூலம் எடுத்துக் கூறினார்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் விருந்தோம்பலின் சிறப்பு குறித்து பேசியிருப்பதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். இந்த விழாவில் அவர் கூறிய திருக்குறள்;
"இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு" மேற்கண்ட திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி, அதன் விளக்கத்தையும் கூறினார். அதாவது, 'ஒருவர் தனது வாழ்வில் பொருட்களை சேர்த்து, இல்வாழ்வை மேற்கொள்வது எல்லாம் விருந்தினரைப் போற்றி அவர்களுக்கான உதவிகளை செய்வதற்காகவே' என்ற விளக்கத்தையும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.
- 28 July 2022 6:05 PM GMT
நாளை நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு கறுப்பு நிற காய் தேர்வு செய்யப்பட்டது. வெள்ளை மற்றும் கறுப்பு நிற காய் எடுத்து வரப்பட்டது. அப்போது கறுப்பு நிற காயைப் பிரதமர் மோடி தேர்வு செய்தார்.
- 28 July 2022 2:48 PM GMT
செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசுகையில், 75வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி 75 நகரங்களுக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி சென்றதாக குறிப்பிட்டார். மேலும், ஏற்பாடுகளை குறுகிய காலத்தில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்துள்ளது என்றும் பிரதமர் மோடி பாராட்டினார்.
- 28 July 2022 2:39 PM GMT
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடும் அணிக்கான காய் வண்ணத்தை பிரதமர் மோடி தேர்வு செய்தார். அதன்படி, மகளிர் பிரிவில் அதிக புள்ளிகளை கொண்ட இந்திய மகளிர் அணி கருப்பு காய்களுடன் போட்டியை தொடங்குகிறது.
- 28 July 2022 2:28 PM GMT
44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்தும் வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைத்தது பெருமை. நேரு விளையாட்டு அரங்கத்திற்கு பன்னாட்டு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் விழா அமைந்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மிக எழுச்சியோடு நடைபெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
- 28 July 2022 2:19 PM GMT
செஸ் ஒலிம்பியாட் ஜோதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் வழங்கினார். முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வழங்கினார். அதன்பின்னர் இளம் கிராண்ட் மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோர் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றினர்.
- 28 July 2022 2:11 PM GMT
செஸ் ஒலிம்பியாட் ஜோதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் வழங்கினார். முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வழங்கினார். அதன்பின்னர் இளம் கிராண்ட் மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோர் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றினர்.
- 28 July 2022 1:57 PM GMT
மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் பேசுகையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதில் இந்தியா மிகவும் மகிழ்ச்சி அடைவதகவும், விருந்தினரே கடவுள் என்ற வகையில் நிகழ்ச்சியை நடத்துவதாகவும் குறிப்பிட்டார். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஓய்வில்லா முயற்சிக்காக பாராட்டு தெரிவித்தார்.
- 28 July 2022 1:50 PM GMT
சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் பேசும்போது, குறைந்த நேரத்தில் மிக சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த போட்டியை நடத்தும் தமிழகத்துக்கும் இந்திய அரசுக்கும் கடமைப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
- 28 July 2022 1:46 PM GMT
விழாவில் பேசிய மத்திய இணை மந்திரி எல்.முருகன், இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற காரணம் பிரதமர் மோடி என்றும், உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக சென்னையில் இந்த விழா நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார்.