உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே போலுப்பள்ளியில் நடந்து வரும் எண்ணேகொள் கால்வாய் பணிகளை, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை பார்வையிட்ட போது எடுத்த படம். அருகில் கலெக்டர் சரயு, குழு உறுப்பினர்கள் தளி ராமச்சந்திரன், பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன் உள்பட பலர் உள்ளனர். 

சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினர் ஆய்வு

Published On 2023-08-23 14:56 IST   |   Update On 2023-08-23 14:56:00 IST
  • டிஜிட்டல் எக்ஸ்ரே, அவசர சிகிச்சை பிரிவு, மருந்தகம், வெளிப்புற நோயாளிகளின் வருகை மற்றும் அவர்க ளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
  • 31 பயனா ளிகளுக்கு ரூ.2 கோடியே 47 லட்சத்து 32 ஆயிரத்து 384 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

கிருஷ்ணகிரி,

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில், குழு உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்கள் தளி டி.ராமச்சந்திரன், பர்கூர் டி.மதியழகன், போளூர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திருச்செங்கோடு ஈஸ்வரன், திருப்போரூர் பாலாஜி, பரமத்திவேலூர் சேகர் ஆகியோர் நேற்று கிருஷ்ண கிரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்க ளுடன் மாவட்ட கலெக்டர் சரயு உடன் சென்றார்.

நீர்வளத்துறை சார்பில் ரூ.187 கோடியே 77 லடசம் மதிப்பில் நடந்து வரும் எண்ணேகொள் திட்ட பணிகளை ஆய்வு செய்தனர். இந்த திட்டம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 26 ஏரிகள், தருமபுரி மாவட்டத்தில் 7 ஏரிகள் மற்றும் ஒரு அணை மூலம் 23 கிராமங்களை சேர்ந்த 3,408 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து குழுவினர் போலுப்பள்ளி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற அவர்கள் அங்குள்ள டிஜிட்டல் எக்ஸ்ரே, அவசர சிகிச்சை பிரிவு, மருந்தகம், வெளிப்புற நோயாளிகளின் வருகை மற்றும் அவர்க ளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதன் பிறகு கிருஷ்ணகிரி அணை அரசு மேல்நிலை ப்பள்ளியை பார்வையிட்டு மாணவர்களின் வருகை பதிவேடு, ஆசிரியர்கள் வருகை, மாணவர்களின் கற்றல் கற்பித்தல் திறன், கடந்த ஆண்டில் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதங்களை ஆய்வு செய்தனர்.

மேலும் பழுதடைந்த நிலையில் உள்ள வகுப்பறை களை உடனடியாக சீரமைக்க பொது ப்பணித்துறை (கட்டிடங்கள்) அலுவலர்களுக்கு அறிவுறு த்தினர்.

தொடர்ந்து கிருஷ்ணகிரி அணை, திம்மாபுரம் அரசு தோட்டக்கலை பண்ணை, நாகரசம்பட்டி அரசு ஆதி திராவிடர் மாணவர் நல விடுதி, பாரண்டப்பள்ளி ஓலா வாகன தொழிற்சாலை, ஓலைப்பட்டி செய்யாறு காலணி தயாரிப்பு தொழிற்சாலைகளை ஆய்வு செய்தனர்.

இதன் பின்னர் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் பல்வேறு துறைகள் சார்பாக நிலுவையில் உள்ள மனுக்கள் மீதான நடவடி க்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து 31 பயனா ளிகளுக்கு ரூ.2 கோடியே 47 லட்சத்து 32 ஆயிரத்து 384 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சிகளில் சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜே ஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயணி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். 

Tags:    

Similar News