உள்ளூர் செய்திகள்

முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்ட காட்சி.

நெல்லையில் சட்டவிழிப்புணர்வு முகாம்

Published On 2023-02-05 09:00 GMT   |   Update On 2023-02-05 09:00 GMT
  • விழிப்புணர்வு முகாமை நெல்லை விபத்து இழப்பீடு வழக்குகள் சிறப்பு நீதிமன்ற சார்பு நீதிபதி மோகன்ராம் தொடங்கி வைத்தார்.
  • நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்

நெல்லை:

நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கிராம உதயம் தலைமை அலுவலகம் கோபாலசமுத்திரம் இணைந்து சமாதானபுரம் அடிப்படை உரிமைகள், தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான நலச் சட்டங்கள் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நெல்லை விபத்து இழப்பீடு வழக்குகள் சிறப்பு நீதிமன்ற சார்பு நீதிபதி மோகன்ராம் தலைமை தாங்கி விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தார்.

கிராம உதயம் வழக்கறிஞர் ஆலோசனை குழு உறுப்பினர் டாக்டர் புகழேந்தி பகத்சிங் வரவேற்று பேசினார். பாளை கூடுதல் வட்டாட்சியர் மீனா முன்னிலை வகித்தார். கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் சிறப்புரை ஆற்றினார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர்கள் சுசிலா, ஆறுமுகத்தாய் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் பேச்சியம்மாள் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் மற்றும் துணிப்பைகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News