உள்ளூர் செய்திகள்

ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டம் தொடக்கம்

Published On 2023-03-03 09:48 GMT   |   Update On 2023-03-03 09:48 GMT
  • குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
  • முகாமை கலெக்டர் பார்வையிட்டு, அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உருண்டைகளை வழங்கினார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஊராட்சி ஒன்றியம், சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில் "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்து, குழந்தைகள் மற்றும் தாயர்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக முதல்வரின் முன்னோடி திட்டமான "ஊட்டச்சத்தை உறுதிசெய்" திட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் தமிழக முதல்&அமைச்சர் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் ஊராட்சி ஒன்றியம், சின்னமட்டாரப்பள்ளி அங்கன்வாடி மையத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, மத்தூர், பர்கூர், காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, சூளகிரி, கெலமங்கலம், ஓசூர், தளி ஆகிய 10 ஒன்றியங்களில் உள்ள 1,796 அங்கன்வாடி மையங்களில் பயனடையும் பயனாளிகளில், மிக கடுமையான ஊட்டச்சத்து குறையுள்ள 939 குழந்தைகளின் தாய்மார்களுக்கு தலா 2 ஊட்டசத்து பெட்டகம் என 1,878 ஊட்டச்சத்து பெட்டகமும், மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1,485 குழ்நதைகளின் தாய்மார்களுக்கு தலா ஒரு ஊட்டசத்து பெட்டகமும் என மொத்தம் 3,363 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட உள்ளது.மேலும், 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 8 வாரங்களுக்கு, அதாவது 56 நாட்களுக்கு ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்துவதற்காக பசை வடிவிலான ஊட்டசத்து மருந்து வழங்கப்படுகிறது. மேலும், ஊட்டசத்து பெட்டகத்தில் புரோட்டின் பவுடர் 1 கிலோ, பேரிச்சை பழம் 1 கிலோ, இரும்பு சத்து சிரப் 3, டவல் 1, நெய் அரை கிலோ மற்றும் குடற்புழு நீக்கும் மாத்திரை 1 ஆகியவை வழங்கப்பட உள்ளது. மேலும், அங்கன்வாடி பணியாளர்களை கொண்டு, ஊட்டச்சத்து பெட்டகத்தில் உள்ள ஊட்டச்சத்து பொருட்களை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என பயனாளிகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. எனவே, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இங்கு வழங்கப்பட்டுள்ள பொருட்களை உட்கொண்டு, தங்களின் ஊட்ட சத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் சார்பாக அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து உணவு கண்காட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பாக குழந்தைகளுக்கு வாராந்திர சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாமை கலெக்டர் பார்வையிட்டு, அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உருண்டைகளை வழங்கினார். 

Tags:    

Similar News