உள்ளூர் செய்திகள்

மதுக்கூரில் விளக்கு பூஜை நடந்தது. 

மதுக்கூரில், அய்யப்ப பக்தர்கள் சார்பில் விளக்கு பூஜை

Published On 2022-12-28 09:39 GMT   |   Update On 2022-12-28 09:39 GMT
  • அய்யப்பனுக்கு அபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது.
  • 600-க்கும் மேற்பட்ட சிறுமிகளின் அகல் விளக்கு ஊர்வலம் நடைபெற்றது.

மதுக்கூர்:

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூரில் ஐயப்ப பக்தர்கள் சங்கம் மற்றும் விழா குழுவினர் சார்பில் மதுக்கூர் பிள்ளையார் கோயில் தெரு அருகே அமைந்துள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

இதனை அடுத்து 25-ந் தேதி அன்று காலை கணபதி ஹோமமும் கஜ பூஜையும், கோ பூஜையும், 9 மணி அளவில் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து ஐயப்ப சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும் புஷ்பாஞ்சலியும் நடை பெற்றது.

சிறப்பு விருந்தினராக மதுக்கூர் மண்ணின் மைந்தர் திரைப்பட இயக்குனர் கவிஞர் பாடலாசிரியர் நடிகர் யார் கண்ணன் 50ம் ஆண்டு மண்டல பூஜை சிறப்பு மலரை வெளியிட்டார்.

இதனை அடுத்து மாலை 6 மணி அளவில் மதுக்கூர் வடக்கு பெரமையா கோயில் இருந்து நாதஸ்வர சிறப்பு இன்னிசை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.

இதைத் தொடர்ந்து ஸ்ரீ ஐயப்ப சாமி அலங்கார ஊர்வலம் மதுக்கூர் வடக்கு பெரமையா கோயிலில் இருந்து மெயின் ரோடு வழியாக திருமண மண்டபத்தை வந்து அடைந்தது.

இதில் 600-க்கும் மேற்பட்ட சிறுமிகளின் அகல் விளக்கு ஊர்வலம் நடைபெற்றது.

இதை அடுத்து அகல் விளக்கு ஏந்திய சிறுமிகளுக்கு தனியார் திருமண மண்டபத்தில் பரிசு பொருட்கள் பேனா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த விழா ஏற்பாடுகளை ஐயப்ப பக்தர்கள் சங்கமும், ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் ஐயப்பன் பக்தர்கள் சங்க சுவாமிகள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.

Tags:    

Similar News