உள்ளூர் செய்திகள்

புதிய கல்வி கொள்கை தாய்மொழியை ஊக்கப்படுத்த வழிவகுக்கும்- எல்.முருகன் பேட்டி

Published On 2023-02-01 10:09 GMT   |   Update On 2023-02-01 10:09 GMT
  • ஜி20 மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று பல்வேறு துறைகள் சார்ந்த நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நடத்தி வருகிறது.
  • புதிய கல்வி கொள்கை உலகத்திற்கு போட்டியாக இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை வழிகாட்டும் விதமாக அமையும்.

சென்னை:

இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டையொட்டி பல மாநிலங்களின் தலைநகரங்களில் பல்வேறு தலைப்புகளில் உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னையில் 3 நாள் கல்வி கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. தரமணி ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் 29 நாடுகளை சார்ந்த பிரதிநிதிகள், அரசுத்துறை உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் என 900 பேர் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து 2-வது நாள் கருத்தரங்கு இன்று காலை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஓட்டலில் நடைபெற்றது.

நேற்று விவாதிக்கப்பட்ட பல்வேறு அம்சங்களின் தொடர்ச்சியாக இன்றைய கூட்டத்தில் அனைத்து நாட்டு பிரதிநிதிகளும் விவாதித்தனர்.

இதில் மத்திய அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய்மூர்த்தி தொடக்க உரையாற்றினார். மத்திய மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டு வரவேற்று பேசினார். அப்போது புதிய கல்வி கொள்கை குறித்து விரிவாக பேசினார்.

இதன்பிறகு மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜி20 மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று பல்வேறு துறைகள் சார்ந்த நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நடத்தி வருகிறது. அந்த வரிசையில் சென்னையில் கல்வி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் 29 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கருத்தரங்கை சென்னையில் நடத்துவது கவுரவத்தை கொடுக்கும் நிகழ்வாக உள்ளது. இந்த மாநாடு மூலம் கல்வித்துறையில் ஆராய்ச்சி மேம்படும். புதுப்புது கண்டுபிடிப்புகள் திறன் முக்கியத்துவம், ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம், புதிய தேசிய கல்வி கொள்கை, தாய்மொழியை ஊக்குவிக்க என பலவற்றுக்கு இது உதவும்.

இன்றைய புதிய கல்வி கொள்கை உலகத்திற்கு போட்டியாக இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை வழிகாட்டும் விதமாக அமையும். தாய்மொழியை ஊக்கப்படுத்தவும் வழிவகுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News