உள்ளூர் செய்திகள்

குண்டு முனியப்பன் கோவில் திருவிழா

Published On 2023-02-16 15:05 IST   |   Update On 2023-02-16 15:05:00 IST
  • முப்பூசை செய்து வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
  • பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது.

பாலக்கோடு,

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஈச்சம்பள்ளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீசாப்பு குண்டு முனியப்பன் கோவிலில் முப்பூசை செய்து வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இக்கோவிலில் முப்பூசை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் நடைப்பெறுவது வழக்கம். இதனையடுத்து விழா கடந்த 13- ம் தேதி கங்கா பூஜை, கணபதி பூஜையுடன் தொடங்கியது.

இன்று அதிகாலை முதலே ஸ்ரீசாப்பு குண்டு முனியப்பனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது.

குழந்தை வரம் வேண்டுபவர்கள் முப்பூசை செய்து ஆடு, கோழி, பன்றி ஆகியவற்றை பலியிட்டும், மாவிளக்கு தட்டு எடுத்தும் தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News