உள்ளூர் செய்திகள்

பாளை தெற்கு பஜார் முத்தாரம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்த போது எடுத்த படம்.

பாளையில் முத்தாரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

Published On 2023-09-03 14:49 IST   |   Update On 2023-09-03 14:49:00 IST
  • முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
  • விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை:

பாளையில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற 12 அம்மன் ஆலயங்களில் முத்தாரம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

தொடர்ந்து தாமிரபரணி நதியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இன்று அதிகாலை வரை 4 கால யாகசாலை பூஜை செய்யப்பட்டது.

மேலும் கும்பாபி ஷேகத்திற்கு தேவையான பிரதான பூஜைகளும் நடத்தப்பட்டது.

தொடர்ந்து 3 நாட்கள் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட மகா கும்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மூலவர் விமானத்தில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மதியம் மகா அபிஷேகமும், இரவு சகஸ்ர நாம அர்ச்சனையும், திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News