குமாரபாளையத்தில் பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பாண்டுரங்கர் கோவிலில் கும்பாபிஷேக விழா
குமாரபாளையம்:
குமாரபாளையம் விட்டலபுரி பகுதியில் உள்ள விடோபா சமேத பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் சம்புரோஷனம் விழா நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
இன்று காவிரி ஆற்றிலிருந்து திருமஞ்சன தீர்த்தக்குடங்கள் எடுத்து வருதல், இன்று மாலை முதல் கால யாகசாலை பூஜை, நாளை 2-ம் கால பூஜை மற்றும் கொடிமரம் வைத்தல், 3-ம் கால பூஜை, வருகிற 17-ந் தேதி 4-ம் கால பூஜை, காலை 9 மணியளவில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றுதல் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது. அதே நாள் இரவு புஷ்ப பல்லக்கில், கருட வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறவுள்ளது. விழாக்குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.