உள்ளூர் செய்திகள்

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-08-28 09:38 GMT   |   Update On 2023-08-28 09:38 GMT
  • கடந்த 20-ந் தேதி 2 கால யாகசால பூஜை நடந்தது.
  • புனிதநீர் அடங்கிய கடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுரத்தை வந்தடைந்தனர்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த கழனிவாசல் கிராமத்தில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக கடந்த 20-ந் தேதி 2 கால யாகசால பூஜையை சிவசிதம்பரம் குடும்பத்தார்கள் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில், கல்யாணசுந்தர குருக்கள் நடத்தினார்.

அதன் பின்னர், பூர்ணாஹுதி நடைபெற்றது.தொடர்ந்து, சிவாச்சாரியர்கள் புனிதநீர் அடங்கிய கடங்களை கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து கோபுரத்தை வந்தடைந்தனர்.

பின், கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, மூலவருக்கு அபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேக பணிகளுக்காக ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் குலோத்துங்க சோடியன், டெல்லியை சேர்ந்த சந்திரசேகர், ராணுவதுறை உதவி செயலாளர் தேன்மொழி சந்திரசேகர், ஆசிரியை வனிதா குலோத்துங்க சோடியன், மாதவன் உள்ளிட்ட பக்தர்கள் உபயம் செய்தனர்.

விழாவில் ஊராட்சி தலைவர் செந்தில்குமார், முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜாங்கம், குருக்கள் ரமணி, கோவில் பூசாரி கலியமூர்த்தி, நாட்டாமைகள், கிராமமக்கள், மகளிர் சுய குழுவினர், இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News