உள்ளூர் செய்திகள்

அங்குள்ள முதியோர்களுக்கு நகர மன்ற தலைவர் மதிய உணவை வழங்கினார்.

கிருஷ்ணகிரி ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் உலக வீடற்றோர் தினம் கடைபிடிப்பு

Published On 2022-10-11 14:53 IST   |   Update On 2022-10-11 14:53:00 IST
  • ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் தங்க வைத்து மறுவாழ்வு அளிக்கும் வகையில் விழிப்புணர்வு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
  • முதியோர் காப்பகத்தில், நகரமன்ற தலைவர் பரிதாநவாப் தலைமையில் உலக வீடற்றோர் தினம் கடைபிடிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நகராட்சி யில் வருடந்தோறும் அக்டோபர் 10ம் தேதியன்று உலக வீடற்றோர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நகராட்சி பகுதியில் சாலை யோரம் வசிக்கும் தனிநபர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வீடு இல்லாமல் வசிப்பவர்களை மீட்டு ராசுவீதியில் பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் தங்க வைத்து மறுவாழ்வு அளிக்கும் வகையில் விழிப்புணர்வு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று உலக வீடற்றோர் தினத்தை முன்னிட்டு ராசுவீதியில் உள்ள முதியோர் காப்பகத்தில், நகரமன்ற தலைவர் பரிதாநவாப் தலைமையில் உலக வீடற்றோர் தினம் கடைபிடிக்கப்பட்டது.

அப்போது அங்குள்ள முதியோர்களுக்கு நகர மன்ற தலைவர் மதிய உணவை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நாகராட்சி ஆணையர் (பொ) சரவணன், மருத்துவர் இனியள் மண்டோதரி, நகரமைப்பு ஆய்வாளர் செந்தில்குமார், செழியன், மேலாளர் மகேஸ்வரி, கனல் சுப்பிரமணி, மேற்பார்வையாளர் ரேஷ்மா இதாயத், மாதேஷ், வினித் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News