தருமபுரம் ஆதீனம் சாமி தரிசனம் செய்தார்.
வைத்தியநாதசாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு
- செல்வ முத்துக்குமாரசாமிக்கு 21 வகையான நறுமண திரவியபொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்.
- கேதார்நாத்திலிருந்து 20 மணி நேரத்தில் வருகை புரிந்து தருமபுரம் ஆதீனம் சாமி தரிசனம்.
சீர்காழி:
வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலில் புரட்டாசிமாத கிருத்திகையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
முன்னதாக வள்ளி, தெய்வானைஉடனாகிய செல்வ முத்துக்குமாரசுவாமிக்கு 21 வகையான நறுமன திரவியபொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு மலர்கள், ஆபரணங்கள் கொண்டு அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து சண்முகா ர்ச்சனை செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
இந்நிகழ்வில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தார்.
உடன் வேளாக்குறிச்சி இளவரசு சுவாமிகள், திருப்பனந்தாள் காசிமடத்து இளவரசு சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கேதார்நாத்திலிருந்து 20 மணி நேரத்தில் வருகை புரிந்து தருமபுரம் ஆதீனம் பங்கேற்று தரிசனம் செய்தது குறிப்பிடதக்கது.