உள்ளூர் செய்திகள்

நகை மோசடியில் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களை படத்தில் காணலாம்

கேத்தனூர் வங்கியில் அடகு நகை மோசடி - பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கேட்டு வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை

Published On 2022-06-22 11:49 GMT   |   Update On 2022-06-22 11:49 GMT
  • நகைகளில் குறிப்பிட்ட அளவை வெட்டி எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
  • வங்கி தரப்பினர் 10 நாட்களுக்குள் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

பல்லடம் :

பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது இந்த கிளையில் கேத்தனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கணக்குகள் தொடங்கி வரவு செலவு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் சிலர் குடும்ப சூழல் காரணமாக கேத்தனூர் வங்கி கிளையை அணுகி நகை கடன் பெற முயலும் பொழுது அங்கு நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த சேகர்(57) வாடிக்கையாளர்கள் கொடுக்கும் நகைகளில் குறிப்பிட்ட அளவை வெட்டி எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பா–ளையம் போலீசார் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் நகை மோசடியில் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க இதுவரை 3 முறை பேச்சுவா–ர்த்தை நடைபெற்றது கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையில் ஜூன் 20-ம் தேதிக்குள் இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கி நிர்வாகம் கூறியதாக கூறப்பட்ட நிலையில் இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை இந்த நிலையில் நேற்று 4 ம் முறையாக கேத்தனூர் எஸ்.பி.ஐ. வங்கியில் பேச்சுவார்த்தை நடைபெ–ற்றது பல்லடம் தாசில்தார் நந்தகோபால்,கிளை மேலாளர் சுதாதேவி, வங்கி வழக்கறிஞர்கள், வாவிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலாமணி மற்றும் வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொ–ண்டனர். இதில் வங்கியில் நகை இழந்தவர்கள் கொடுத்த மனுவின் மீது விசாரணை செய்யப்பட்டு இழப்பீடு நிர்ணயிக்கப்பட்ட நபர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட வேண்டும். மொத்தம் பெறப்பட்ட 574 மனுக்களில் 400 மனுக்கள் நகை மதிப்பீடு செய்யப்பட்டு இழப்பீடு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அது போக நகைகளை இன்னும் மதிப்பீடு மதிப்பீடு செய்யாமல் உள்ள 174 வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக அழைத்து அவர்கள் நகையையும் மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்.

இழப்பீடு கேட்டு விண்ணப்பித்த மனுக்களில் இழப்பீடு தொகை திருப்தியில்லாத 32 வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பி அவர்கள் ஒப்புக் கொள்கின்ற நகை மதிப்பீட்டை நிர்ணயம் செய்யவேண்டும்.நகை மோசடி நடந்த நாளிலிருந்து மார்ச்சிலிருந்நு இன்று வரை வங்கியில் உள்ள நகைகளுக்கு வட்டி வசூலிக்க கூடாது 10 நாட்களுக்குள் இழப்பீடு வழங்கவேண்டும். காலதாமதம் செய்தால் போராட்டம் நடத்தப்படும் வாடிக்கையாளர்கள் தரப்பில் என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட வங்கி தரப்பினர் 10 நாட்களுக்குள் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். முன்னதாக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக வங்கி நிர்வாகத்திடம் உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News