உள்ளூர் செய்திகள்

காவேரி புஷ்கரணி பாலாறு சங்கமத்தில் காவிரி ஆரத்தி விழா

Published On 2023-10-14 14:44 IST   |   Update On 2023-10-14 14:44:00 IST
  • மகாளயபட்சம் முன்னோர் சாபம் நீக்கும் பொருட்டு சிறப்பு யாகம்
  • 2000 பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்

சாய்பாபாகாலனி,

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் காவேரி புஷ்கரணி பாலாறு சங்கமத்தில் காவிரி ஆரத்தி விழா உலக நலன் வேண்டி, நல்ல மழை வளம் பெற்று விவசாயம் உணவு தானியங்கள் வளர்ச்சி அடையவும் காவேரியில் சீக்கிரம் தண்ணீர் திறந்து விடவும் மகாலய பட்சம் முன்னோர் சாபம் நீக்கும் பொருட்டு சிறப்பு யாகம் காவிரி நதிக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு ஆரத்தி பூஜை நடைபெற்றது. இதில் 2000 பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த பூஜையானது கோவை ஸ்ரீமத் தர்மராஜா அருள் பீடம் தவத்திரு கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது. இதில் பண்ணவாடி ஆதீனம் வெங்கடேஸ்வர சுவாமிகள் மண்டல ஜீயர் சுவாமிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News