உள்ளூர் செய்திகள்

படகில் ஏற்ற தயாராகும் ஐஸ் கட்டிகளை படத்தில் காணலாம்.

மீன்பிடி தடைக்காலம் முடிவடைய உள்ளதால் கடலுக்குள் செல்ல தயாராகும் காசிமேடு மீனவர்கள்

Published On 2023-06-13 08:04 IST   |   Update On 2023-06-13 08:04:00 IST
  • மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவோடு முடிவடைய உள்ளது.
  • மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ந் முதல் ஜூன் 14-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

காசிமேடு :

தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினகளின் இனப்பெருக்க காலமாக, மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. மீன் வளத்தை பெருக்கும் வகையில் இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் முதல் இந்த மாதம் 14-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

இந்த தடையானது நாளை(புதன்கிழமை) நள்ளிரவோடு முடிவடைய உள்ளது. இதனால் கடலுக்குள் செல்ல காசிமேடு மீனவர்கள் தயாராகி வருகிறார்கள்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்குள் செல்ல தங்களது விசைப்படகுகளில் ஐஸ் ஏற்றுவது, வலைகளை பின்னி சரி செய்வது, டீசல் நிரப்புவது, உதிரி பாகங்களை பழுது பார்த்து சரிசெய்வது, தங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் குடிநீரை நிரப்புவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் வழக்கத்தைவிட பரபரப்பாக காணப்படுகிறது.

Tags:    

Similar News